( வாஸ் கூஞ்ஞ)

மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாத்துன் நபி தின விழாவை முன்னிட்டு எவ்வாறு இவ்விழாவை நேர்த்தியான முறையில் நடத்துவது சம்பந்தமாக புத்தசாசன சமய விவரங்கள் மற்றும் கலாச்சார அலுவலர்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்க தலைமையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் பங்கேற்போடு மன்னார் மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (26) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லீம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் . பிரதிப் பணிப்பாளர் உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முசலி பிரதேச செயலகப் பிரிவில் நடைபெற இருக்கும் இவ்விழாவை முன்னிட்டு சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு இவ்விழா நடக்கும் இடத்திலுள்ள வீதி புனரமைத்தல் , மின்சாரம் , சுகாதாரம் , போக்குவரத்து , இவ்விழாவில் கலந்து கொள்ள வரும் அதிகாரிகளின் தங்குமிட வசதிகள் , மீலாத்துன் நபி தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட வேண்டிய போட்டிகள் போன்ற முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இவ்விழா நடைபெறும் தினம் நேரம் போன்றவை ஜனாதிபதியை சந்தித்து அவரின் ஆலோசனைக்கு அமைய அறிவிக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் முயற்சியின் பலனாக 2023 ஆம் அண்டு இந்நடப்பு வருடத்துக்கான தேசிய மீலான்துன் நபி விழா மன்னாரில் முதற்தடவையாக நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான அடுத்தக் கூட்டம் எதிர்வரும் 16.09.2023 காலை 09 மணிக்கு முசலி பிரதேச செயலகத்தில் நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *