(வாஸ் கூஞ்ஞ) மதவாச்சி மன்னார் ஏ14 வீதியில் பயணித்த வாகனம் ஒன்று தடம் புரண்டதில் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

இச்சம்பவம் செவ்வாய் கிழமை (29) இரவு ஒன்பது மணியளவில் மன்னார் நொச்சிக்குளம் இடத்துக்கு அரகாமையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது

எலிபன்ட் கவூஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் இக் கம்பனியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மன்னாருக்கு விற்பனை செய்வதற்காக சம்பவம் அன்று அவிசாவலையிலிருந்து மன்னாருக்கு வந்துள்ளது.

இவ்வாகனத்தில் சாரதி உட்பட இருவர் பயணித்துள்ளனர்.

சம்பவம் அன்று இரவு 9 மணியளவில் இவ்வாகனம் மன்னார் நொச்சியாகமம் என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்தபொழுது இவ்வாகனத்தின் முன் சில்லு போல்ட் உடைந்ததும் சில்லு கழன்று வேறாகச் சென்றுள்ளது.

இதனால் வாகம் தடம் புரண்டு வீதியின் அருகாமையில் வயல் பள்ளத்துக்குள் வீழ்ந்துள்ளது.

வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியபோதும் இதில் பயணித்த இருவரும் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் நிற்பவர்களே உயிர் தப்பியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *