(வாஸ் கூஞ்ஞ) தனித்துவமாக எமது அடையாளத்தை விட்டு விலகாத உங்கள் கலை கலாச்சார விழுமியங்கள் பௌத்தர்களுடன் ஒன்றித்து செல்ல வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதை உணர்ந்து முஸ்லீம்கள் நீங்கள் செயல்பட வேண்டும். அத்துடன் தலைமைத்துவத்துக்கு நீங்கள் வருமுன் உங்கள் கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் எல்லாவற்றிற்கும் முக்கியமானது என பலஸ்தீன் பிரதி உயர் ஸ்தானிகர் ஹீசாம் அபூ தாஹா இவ்வாறு தெரிவித்தார்.

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னனி மன்னார் மாவட்ட குழுக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (03) காலை 8.30 மணித் தொடக்கம் மாலை 4 மணி வரை மன்னார் ஆகாஷ் ஹொட்டலில் இடம்பெற்றபோது  பலஸ்தீன் பிரதி உயர் ஸ்தானிகர் ஹீசாம் அபூ தாஹா இங்கு இளைஞர் மத்தியில் தொடர்ந்து உரையாற்றுகையில்

இளைஞர்களே தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தலைமைத்துவத்துக்கான காலம் இன்னும் உங்களுக்கு இருக்கின்றது.

சிறு வயதிலிருந்து நீங்கள் வளரும்பொழுது உங்களுக்கு அந்தந்த காலத்தில் செயல்படக்கூடிய தகுதிகளும் உங்களுடன் வளர்ந்து வருகின்றது.

நான் இன்று உங்கள் முன் ஒரு பலஸ்தீன ஒரு பிரதி உயர் ஸ்தானிகராக இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஒவ்வொருவரும் தங்களிடமுள்ள ஆற்றல்களிலும் திறமைககளிலும் நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.

எங்களிடமுள்ள இறை நம்பிக்கையும் ஒவ்வொருவரிடமும் உள்ள தொடர்புகளும் எல்லாவற்றையும் தாண்டி ஒருங்கிணையக் கூடியதாக இருக்கின்றது.

எங்களது சமூகத்தினரும் உலகத்தினதும் சுபீட்சத்துக்காக எங்களது ஆற்றல்கள் உதவி செய்யும் என நாம் நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.

உண்மையில் இலங்கையிலுள்ள முஸ்லீம்களுக்கான தலைமைத்துவ அடையாளங்கள் நிறைய இருக்கின்றன. கலை கலாச்சார சமய நம்பிக்கைகள் எங்களிடம் பலமாக இருக்கின்றன.

ஆகவே நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவற்றை நம்பிக்கையாகக் கொண்டு நாட்டுக்கும் உலக மட்டத்திலும் முன்னுதாரணமான செயல்பாடுகளை நாம் செய்ய வேண்டும்.

நான் இங்கு உங்களுக்கு சொல்வதை நீங்கள் எற்றுக் கொண்டாலும் அல்லது ஏற்றுக் கொள்ளாவிடினும் உங்களுக்கு இதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நீங்கள் அரபு நாடுகளிலோ அல்லது அரபியர்களுடனோ வாழவில்லை. மாறாக நீங்கள் பௌத்த மக்களுடனே வாழ்கின்றீர்கள்.

எனவே உங்கள் கலை கலாச்சார விழுமியங்கள் பௌத்தர்களுடன் ஒன்றித்து செல்ல வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும்.

அதேபோல் நீங்கள் முஸ்லிமாகவே இருக்க வேண்டும். அதுவும் இலங்கை முஸ்லீமாகவே வாழ வேண்டும்.

உங்கள் நடை உடை பாவனைகள் தனித்துவமாக எமது அடையாளத்தை விட்டு விலகாத ஒன்றாக இருக்க வேண்டும்.

இங்குள்ள பெண்களை பார்க்கின்றபோது நான் அரபு நாட்டு முஸ்லீமாகவே உணர்கின்றேன்.

எனக்கு நிறைய பௌத்த நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் என்னிடம் கேட்பது ஏன் முஸ்லீம் பெண்கள் இந்த அபாயாவை அணிகின்றனர் என்று.

இலங்கையில் முஸ்லீம் பெண்களுக்கான தனித்துவமான சாறிகள் இருக்கின்றன. ஏன் அவைகளை இவர்கள் அணிய மறுக்கின்றனர் எனவும் கேட்கப்படுகின்றது.

தலைமைத்துவத்துக்கு நீங்கள் வருமுன் உங்கள் கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் எல்லாவற்றிற்கும் முக்கியமானது.

இதை வைத்துக் கொண்டே காலத்துக்கு ஏற்றவாறு உங்கள் தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்ள முடியும்.

முறண்பாடுகளில் சமன் பாடுகளை நாம் நாடும்போதுதான் ஒற்றுமையையும் சமன்பாடு காண அமைகின்றது. இலங்கையில் இருக்கும் காலத்தில் நான் இதை நன்கு அவதானித்துள்ளேன்.

ஆகவே இந்த நாட்டுக்கு ஏற்றவாறு நாம் வாழும்போது நல்ல விழுமியங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

முஸ்லீம்களாக பிறந்திருப்பதில் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். இதை வைத்துக் கொண்டு நாம் மற்றவர்களின் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குரான்படி நாம் மற்றறைய சமூகத்தினரை மதித்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

இக்காலம் மிக துரிதமாக மாறும் காலமாக இருந்து வருகின்றது. ஆகவே இவற்றை நாம் புரிந்து கொண்டு சூழலுக்க ஏற்றவாறு வாழ முன்வர வேண்டும்.

அத்துடன் நாம் சர்வதேச மட்டத்pலும் சிந்திக்க வேண்டும். நாம் அரசியல் அல்லது பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து வந்தாலும் நாம் மனிதர்களே எம்பதை மனதில் இருத்தி மனித பண்பாட்டுடன் வாழ வேண்டும்.

திறந்த மனதுடன் செயல்பட வேண்டும். ஈற்றில் உங்கள் தலைமைத்துவம் அன்பு பாசம் நிறைந்த ஒன்றாக மலர எனது வாழ்த்துக்கள் என இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *