(வாஸ் கூஞ்ஞ)

ஏந்தவித தனியாh பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லாமலேயே தான் மன்னார் மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளேன் என தற்பொழுது வெளியாகியுள்ள  கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்iசியில் மன்னார் மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ள மாணவன் தியாகன் டேவதரன் இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது வெளியாகியுள்ள 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதல் நிலையை மடு கல்வி வலயத்திலுள்ள மன்.அடம்பன் மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை மாணவன் தியாகன் டேவதரன் பெற்றுள்ளார்.

இவர் இணைந்த கணிதம் . பௌதிகவியல் . இரசாயணவியல் ஆகிய பாடங்களில் மூன்று ‘ஏ’ பெற்றுள்ளார்.

இவர் மன்னார் மாவட்டத்தில் முதல் நிலையையும் அகில இலங்கை ரீதியில் 465 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

இவர் வண்ணாக்குளத்தைச் சேர்ந்த திரு திருமதி தியாகன் யோகராணி ஆகியோரின் புதல்வராவார்.

இவர் தனது ஆரம்பக் கலவித் தொடக்கம் கல்வி பொது தராதர சாதாரண வகுப்பு வரை ஆண்டான்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும்

பின் கல்வி பொது தராதர உயர்தர வகுப்புக் கல்வியை மன்.அடம்பன் மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் பெற்றே இத் தகமையை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தான் பாடசாலை கல்வியுடனே இருந்ததாகவும் எந்த தனியார் பிரத்தியேக வகுப்புகளுக்கும் செல்லவில்லை எனவும் தெரிவித்ததுடன்  தனது அண்ணன் விஞ்ஞானப் பிரிவில் கற்றிருந்தமையால் அவரின் உதவி எனக்கு கிடைத்தது என மேலும் தெரிவித்துள்ளார்.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *