மலையக இளைஞர் – யுவதிகளுக்கு விஷேட தொழிற்பயிற்சித் திட்டம்

Share

Share

Share

Share

பல்வேறு திறமைகளைக் கொண்டுள்ள மாணவர்கள் (OL) சாதாரண தரத்தின் பின்னர் உயர்தரத்துக்கு செல்லமுடியாத நிலையில்  தொழிலின்றி அவலப்படுவதை காணமுடிகிறது. இத்தகைய இளைஞர் யுவதிகளை இனம்கண்டு கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஊடாக அவரவரின் திறமைக்கேற்ப தொழிற்பயிற்சிகளை வழங்க விஷேட திட்டமொன்றை முதற்கட்டமாக 11 ஆம் திகதி சனிக்கிழமை பதுளை மாவட்டத்தில் ஆரப்பித்து வைக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மலையக இளைஞர் யுவதிகளிடத்தில் பலதரப்பட்ட திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. அவற்றை அவர்களிடத் திலிருந்து வெளிக்கொணர்வதற்கு வழிகாட்டல்கள், விழிப்புணர்வுகள், தொழில்சார் பயிற்சிகள் அவசியமாகின்றன. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் உரிய அடைவை எட்டாதோர்

பின்னர் உயர்தரத்துக்கு செல்லமுடியாமலும் தொழிலின்றியும் அவலப்படுவதை காணமுடிகிறது.  மனதளவில் வலுவிழந்து தவறான பாதைகளையும் தேர்ந்தெடுத்துவிடுகின்றனர். நமது நாட்டின் எதிகாலமே இளைஞர் யுவதிகளின் கைகளில்தான் தங்கியிருக்கிறது.

அகவே அவர்களுக்கு கைகொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்கு இருக்கவேண்டும். அந்தவகையில்தான் கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஊடாக இளைஞர் யுவதிகளின் திறமைக்கேற்ப அவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்க விஷேட திட்டமொன்றை முதற்கட்டமாக 11ஆம் திகதி சனிக்கிழமை பதுளை மாவட்டத்தில் ஆரப்பித்து வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் அமைச்சின் செயலாளர், தொழிற்பயிற்சி நிலையங்களின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிராந்திய பணிப்பாளர்கள், செயலாளர்கள் ஆகியோரோரது ஆலோசனைகளுடன் கல்வி இராஜாங்க அமைச்சரின் கண்காணிப்பின் கீழ் 11ஆம் திகதி பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு பயிற்சிக்கான அங்குரார்ப்பண செயலமர்வு இடம்பெறவுள்ளது.

இதேவேளை க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பின் உயர்தர கல்வியை மேற்கொள்ளும் மாணவ மாணவகளிக்கும் சாதாரண தரப் பரீட்சையின் பின் உயர்தரத்தை மேற்கொள்ள முடியாத மாணவ மாணவிகளுக்கும் தத்தமது தெரிவின்படி பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள சகல ஏற்பாடுகளையும் செய்து வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மார்க்கண்டன் ரூபவதனன் ஆசிரியர் ஆலோசகர் (ஓய்வு நிலை) எஸ். பிரபாகரன், பதுளை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (Naita)  தொழில் ஆலோசகர் ஏ.கே.எல். சத்துரங்க பதுளை தொழிநுட்ப கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின்  ( Tec ) ஆலோசனை அதிகாரி சாமிக்க சுரங்க, பதுளை உயர் தொழில்நுட்ப கல்லூரி ஆலோசனை அதிகாரி ரங்கண விதானகமகே ஆகியோர் இதன்போது பங்கேற்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...