மலையக பெருந்தோட்ட பகுதிகளில் மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு  வாய்ப்பு வழங்க வேண்டும் – ராஜ் அசோக் தெரிவிப்பு.

Share

Share

Share

Share

மின் பட்டியலை உரிய நேரத்தில் குறிப்பிட்ட திகதியில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே சமயத்தில் பெருந்தோட்ட பகுதிகளிவ் மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
காரணம் வறுமானத்தில் குறைந்து நிற்கும் சமூகமாக இருப்பதால் இவ்வாறனதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் சபையில் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இக்கோரிகையில்  மின் கட்டணம் அதிகரிப்பினால் பெரும்பாலும் மலையக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பிட்ட திகதிக்கு மின் பட்டியல்  வழங்க முடியாமல் போனால் மின் அலகுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.அதற்காக வரியும் வசூலிக்கப்படுகின்றது.உதாரணமாக 90 அலகுகளுக்கு மேல் செல்லும் போது கட்டணம் இரட்டிப்பாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அது மட்டுமல்லாமல் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனையில் மலையக மக்கள் பெரும் கஷ்டத்திக்கு மத்தியில் தனது வாழ்கையை கொண்டு செல்கின்றார்கள் அதிகமான வாழ்க்கை  சுமைகள் மலையக மக்களை இருக்கி பிடிக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் அவர்களுக்கு விசேட சலுகை அடிப்படையில் மின் துண்டிகாமல் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும் இந்த விடயங்களை சபையில் சுட்டிகாட்டி சம்பந்தப்பட்ட ஜனாதிபதி செயலகம், மின் சக்தி அமைச்சர், இலங்கை மின்சார கூட்டுதாபனதிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கும் படியும், சம்பந்தபட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்குபடியும் ராஜ் அசோக் சபையில் கோரிக்கையை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்