காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்தேக்க பகுதிகளில் மழை வேண்டி சர்வமத தலைவர்கள் மவுஸ்ஸாசாகலை நீர்த்தேக்கத்தில் மத வழிபாடுகளை நடத்துகின்றனர்.

பிரதானமாக தேசிய மின் உற்பத்திக்கான நீரை வழங்கும் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்த்தேக்கங்களில் கடும் மழை பொழிய வேண்டி மஸ்கெலியா பிரதேச சர்வமதத் தலைவர்கள் பல விசேட சமய நிகழ்வுகளை மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நடத்தினர்.

மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் அமைக்கும் போது மறைந்து போன பழைய மஸ்கெலியா நகரின் ஆலயம், விகாரை, தேவாலயம் என்பன தற்போது தென்படுகின்ற நிலையில், அவ்விடங்களில் சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மஸ்கெலியா ற்றும் நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரிகள், மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள், கெனியன் நீர் மின் நிலையத்தின் பொறியியலாளர்கள் மற்றும் பணியாளர்கள், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்க அணையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த சமய வழிபாடுகளை மேற்கொண்டனர்.

மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணத்தின் கீழ் உள்ள பழைய மஸ்கெலியா நகரின் ஆலயம், விகாரை மற்றும் தேவாலயங்களில் சமய வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்திற்கு வருகை தந்த மதத் தலைவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நாட்களில் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சுமார் 50% வரை குறைந்துள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *