கனடாவில் கடத்தப்பட்ட வாகனங்கள் மால்டாவின் துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் வைத்து அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளன.

றொரன்டோ பெரும்பாக பகுதிகளில் திருடப்பட்ட வாகனங்களே இவ்வாறு மால்டாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படவிருந்த நிலையில் மீட்கப்பட்டு, நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

3.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 64 வாகனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகையான வாகனங்கள், மால்டா குடியரசுகளில் மீட்கப்பட்டுள்ளன.

றொரன்டோ பெரும்பாக பகுதியில் இவ்வாறு வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த 2021 மார்ச் மாதம் 18 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொன்றியல் துறைமுகம் வழியாக இந்த வாகனங்கள் மால்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாகனங்கள் ஆபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பனற்றில் விற்பனை செய்யப்படடிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *