முதல் நாளில் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலித்துள்ள வாரிசு

Share

Share

Share

Share

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அஜித், விஜய் படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது.

அந்த வகையில் வாரிசு திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலித்துள்ளது முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன அஜித்தின் துணிவு படம் உலகளவில் ரூ.26 கோடி வசூலித்து நூலிழையில் முதல் இடத்தை நழுவவிட்டுள்ளத வாரிசு மற்றும் துணிவு இரண்டும் இணைந்து முதல் நாளில் 50 கோடி ரூபாய் வசூல் செய்தன.

சென்னையைப் பொறுத்தவரை துணிவு திரைப்படம் முதல் நாளில் ரூ.3.75 கோடியும், வாரிசு திரைப்படம் ரூ.3.95 கோடியும் வசூலித்து உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் துணிவு படம் தான் அதிகளவு வசூல் ஈட்டி உள்ளது. அப்படம் முதல் நாளில் ரூ.19 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது.

ஆனால் வாரிசு படம் தமிழ்நாட்டில் ரூ.17 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. கேரளாவில் இப்படம் ரூ 4.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகள்!,
சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி...
தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி மீண்டும்...
12 ம் கட்டை வாய்க்கால் பகுதியில்...
கனேடிய பிரஜைகளுக்கு விசா...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
கனடாவில் லொத்தர் சீட்டு பணப்பரிசுக்கு வரி...