மும்பை தாதர் 44 மாடி கொண்ட குடியிருப்பு பகுதியில் தீ விபத்து

Share

Share

Share

Share

மும்பை தாதர் பகுதியில் ஆர்.ஏ. ரெசிடன்சி என்ற 44 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 42-வது மாடியில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 16 வாகனங்களில் விரைந்து வந்தனர். கட்டிடத்தின் 42-வது மாடிக்கு சென்று வீரர்கள் நடத்திய ஆய்வில் மூடப்பட்டு கிடந்த வீட்டில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து 90 மீட்டர் உயர கிரேன் உள்பட மற்ற உபகரணங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேரம் போராடி நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் தீயை முற்றிலும் அணைத்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது