பிரான்சில் தலைநகர் பாரீஸ் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடினா்.
குறிப்பாக பாரீசில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதி பேரணி நடத்தினர்.
அவர்கள் பிரான்ஸ் மற்றும் உக்ரைன் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியும், ‘போர் வேண்டாம், அமைதி வேண்டும்’, ‘மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்த வேண்டாம்’ ‘நேட்டோவை விட்டு வெளியேறு’ போன்ற வாசகங்கள் அடங்கி பதாகைகளை சுமந்தபடியும் பேரணியாகச் சென்றனர்.