கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட சென்ற இடத்தில் காதலனால் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கில் அந்த காதலன் கைதாகியுள்ளதாகவே பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், கொல்லப்பட்ட பெண் 23 வயதான Kiara Agnew எனவும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் Dawson Creek பகுதியை சேர்ந்தவர் எனவும் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மெக்சிகோவுக்கு விடுமுறையை கழிக்க செல்ல வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது எனவும், இந்த நிலையில் தமது பிறந்தநாளை விடுமுறையுடன் கொண்டாடும் வகையில் காதலருடன் சென்றுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் எதிர்பாராத அதிர்ச்சியாக வெள்ளிக்கிழமை அவர் கொல்லப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மிக விரைவில் Kiara Agnew-வின் உடல் கனடாவுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மெக்சிகோ பொலிசார் தெரிவிக்கையில், ஹொட்டல் ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், வன்முறை நடந்ததற்கான அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *