மேற்கு ஆப்பிரிக்காவில் கோட் டி ஐவாயர் பகுதியில் குரோ என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களது தனித்துவம் வாய்ந்த, பாரம்பரிய நடனங்களில் ஒன்றான ஜாவுலி என்ற துள்ளலான நடனம், மின்னல் வேக அசைவுகளை கொண்டது.

இதில், கவனிக்கத்தக்க விசயம் என்னவெனில், இசைக்கேற்ப கால்களை விரைவாக அசைக்கும்போது, முழு உடலையும் சமநிலையில் வைத்திருக்கும் கலையின் ஓர் வடிவம் ஆக அது திகழ்கிறது. இதனை ஆட கூடிய நபர் தனது கால்களை விரைவாக அசைத்து, உடலின் மேல் பகுதியை அசையாமல் வைத்திருக்கிறார்.

அப்படியே திடீரென வேறு பக்கமும் விரைவாக திரும்பி, தொடர்ந்து ஆடுகிறார். 20-க்கும் மேற்பட்ட வடிவிலான முக கவசங்கள் அணிந்தபடி ஆடப்படும் இந்த நடனத்தில் பல ஸ்டெப்புகளும் (நடன அசைவுகள்) ஒரே வடிவிலானது போன்று தோன்றினாலும், குறிப்பிட்ட அசைவு நடனத்தின்போது, மீண்டும் ஆடப்படுவதில்லை என்பதும் இதன் சிறப்பம்சம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *