நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும். இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை நாம் புறநிலையாக பார்க்காமல், அடுத்த தேர்தலை கண்கூடாக பார்க்காமல் இருந்தால், பௌத்த மதகுருமார்கள் இந்த நாட்டை சீரழித்துக்கொண்டே இருப்பார்கள். நாட்டை முன்னேற்றவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக மகாசங்கம் பற்றிய உங்களது கருத்துக்கள் சிங்களவர்கள் மத்தியில் எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மகா சங்கத்தினரை விமர்சிப்பது புத்திசாலித்தனமா? என வாராந்த இன்று ஊடகவியாளர்களுக்கு கேள்வி பதிலுக்கான பதில் வழங்கையில் இவ்வாறு அறிக்கை மூலமாக பதில் வழங்கினார்.
மேலும் தெரிவிக்கையில்…
” பூனைக்கு மணி கட்டும் பணியை நான் மேற்கொண்டேன். பௌத்த மதகுருமார்கள் அரசின் விவகாரங்களில் தீவிரமாகப் பங்கேற்பதால் ஏற்படும் ஆபத்துகளை அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களும் சுட்டிக்காட்ட வேண்டிய நேரம் இது.
ஆனால் நிச்சயமாக பௌத்த மதகுருமார்கள் தெற்கு மற்றும் வடக்கு கிழக்கிற்கு இடையில் சமாதான தூதுவர்களாக செயல்பட முடியும்.
பௌத்த பிக்குகளின் ஆங்கிலம் அல்லது தமிழ் பேசும் தூதுக்குழு ஒன்று முதலில் வடக்கில் உள்ள எமது புத்திஜீவிகளை சந்தித்து தமிழர்களின் பிரச்சனைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
அதன்பிறகு, வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள, எங்கள் வரலாற்றுப் பேராசிரியர்களுக்கு இடையே தொடர்பு கொள்ளலாம்.
அதே சமயம் அடிமட்ட மட்டத்தில் ஒருவரையொருவர் சந்திக்கும் வகையில் இரு சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்புகளை சிங்கள தமிழ் நட்புறவுச் சங்கங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மனித உரிமைகள் ஆணையாளர்களை வடக்கிற்கு அனுப்புவது மக்களின் தேவைகள் மற்றும் உணர்வுகள் பற்றிய சரியான கண்ணோட்டத்தையோ அல்லது போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையும் சர்வதேச உள்ளீட்டுடன் இருக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையை வழங்காது” என்றார்.