யாழில் இன்று  இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மரைவி படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்களிலும் பொலிஸாரின் தண்ணீர் பவுஸராட் நேருக்நேர் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று நண்பகல் தமத்  கணவருடன் A9 வீதியில் வந்த போது தண்ணீர் பௌசருடன் மோதியதாகவும் கணவர் அந்த இடத்திலேயே பரணமானதாக உயிரழந்தவரின் மனைவியின் உறவினர்கள்  கூறிய்ள்ளார்.

அவரும் படுகாயமடைந்து இருப்பதாகவும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக கோண்டு சென்றதாக பொலிவார் கூறினர்.

ஏ9 வீதி செம்மணி வளைவிற்கு அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

31 வயதுடைய புவனேஸ்வரன் மனேஜ் என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.(26) வயதுடைய மனைவி உயிராபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பவுசரின் சாரதியான பொலிஸ் உத்தியோகத்தர் தொலைபேசியில் பேசியவாறு வாகனத்தை செலுத்திவந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்த பொது மக்கள் தெரிவித்துள்ளமையும் அதனை மறுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *