ஜெயிலர்’ படத்தின் வசூல் 600 கோடியை நெருங்குவதாக கூறப்படும் நிலையில்.. ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள BMW X7 காரை நடிகர் ரஜினிகாந்துக்கு பரிசாக வழங்கியது படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வசூலில் சாதனைகளை ஏற்படுத்தி வருகிறது ஜெயிலர்.

நெல்சன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் சுமார் 600 கோடி ரூபாயை வசூலித்து

இதனை கொண்டாடும் முகமாக படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான கலாநிதி மாறன் ரஜினி அவர்களை சந்தித்து BMW X7 ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.

ரஜினி அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்ற கலாநிதி மாறன் அவர்கள் மலர் கொத்தோடு இலாப பங்கின் காசோலையையும் கொடுத்து சூப்பர் ஸ்டாரை இன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

 

அதேபோன்று இந்த திரைப்படத்தில் ரஜினி நடிப்பதற்காக சம்பளமாக 80 கோடி ரூபாயும் இலாப பங்குக்கும் உடன்பட்டு இருந்தார்.

தறாபோதைய நிலையில் ரஜினிக்கு இலாப பங்காக சுமார் 120 கோடிக்கு மேல் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

அதற்கான செக்கும் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *