கனடாவின் ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழை பூர்வீகமாகக்கொண்ட பார்த்தி கந்தவேள் வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்காப்றோ தென்மேற்கு வட்டாரத்தில்இடைத் தேர்தலில் பார்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளார்.
ரொறன்ரோ பாடசாலை சபையின் பொறுப்பாளராக பார்த்தி கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சி இடைத் தேர்தலில் பார்த்தி 4641 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
மேலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கெவின் ரூபசிங்க 3854 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்காபரோ தென்மேற்கு வட்டாரத்தில் உறுப்பினராக பதவி வகித்த கெரி க்ராவொர்ட் ராஜினாமா செய்த காரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பார்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.