ரொறன்ரோ படுகொலை வழக்கில் தொடர்புடைய தகவல் அளிப்போருக்கு 50,000 டொலர் வெகுமதி

Share

Share

Share

Share

ரொறன்ரோ படுகொலை வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்யும் பொருட்டு, போதுமான தகவல் அளிப்போருக்கு 50,000 டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பொலிசாரின் படுகொலை சம்பவங்களை விசாரிக்கும் பிரிவு மற்றும் ரொறன்ரோவில் குற்றங்களை தடுப்பு குழுவினர் ஆகியோர் இணைந்து செவ்வாய்க்கிழமை குறித்த வெகுமதி தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியான 30 வயது Kiarash Parzham தொடர்பிலேயே வெகுமதி அறிவித்துள்ளனர்.

ஜூன் மாதம் 15ம் திகதி சுமார் 10.10 மணியளவில் யோங்கே தெரு மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ மேற்கு பகுதியில் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

ரொறன்ரோவில் வசிக்கும் 28 வயதான Kian Hoseyni என்பவர் மீதே துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் பொலிசார் சம்பவயிடத்தில் விரைந்து சென்று, முதலுதவி அளித்தும், அவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பில் ரிச்மண்ட் ஹில் பகுதியை சேர்ந்த Kiarash Parzham தேடப்பட்டு வந்ததுடன், தற்போது 50,000 டொலர் வெகுமதியும் அறிவித்துள்ளனர்.

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு
கலிபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஸ்பெயினில் ஏற்பட்ட தீ விபத்தில் 13...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...