றொரன்டோ நகர மேயர் ஜோன் டோரி நேற்றைய தினம் நகர குமாஸ்தாவிடம் தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார்.
எதிர்வரும் 17ம் திகதி அதாவது வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியுடன் தாம் பதவியை துறப்பதாக டோரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் தம்மை மேயராக ஏற்றுக் கொண்டு மக்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
தமது நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் றொரன்டோ மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக ஜோன் டோரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அலுவலக பணியாளர் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக் கொண்ட சம்பவம் தொடர்பிலான தகவல் வெளியானதை தொடர்ந்து டோரி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
இடைத்தேர்தல் மூலம் றொரன்டோ நகர மேயர் பதவி வெற்றிடம் நிரப்பப்பட உள்ளது.