லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி

Share

Share

Share

Share

லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்று வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

வீரபிட்டிய,  மொரகஹாபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த பிரதிப் குமார அஸ்விஸ் (வயது – 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டிய பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துகொண்டிருந்த ‘கள்’ லொறியும்,  ஹட்டனில் இருந்து கினிகத்தேன நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, தியகல பகுதியில் வைத்தே இன்று பிற்பகல் 3.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து நடைபெறும்போது வட்டவளை பகுதியில் மழையுடனான காலநிலை நிலவியுள்ளது.

எனவே, மோட்டார் சைக்களில் வந்தவர் வழுக்கிச்சென்று, லொறியின் பின்பகுதி சிக்கில் சிக்குண்டார் என தெரியவந்துள்ளது.

(அந்துவன்)

பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும் –...
ரயில் விபத்து – 233 பேர்...
இன்று பொசன் பௌர்ணமி தினம்
தமிழகம் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவில்...
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி...
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி...
பாடசாலையொன்றின் கழிப்பறையில் இரகசிய கமரா