கனடாவின் பிரம்டன் பகுதியில் வயது முதிர்ந்த நபர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முதியவர்களிடம் நூதன வழியில் சுமார் 200,000 டொலர் மோசடி செய்த நபருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

லொத்தர் சீட்டில் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளதாக கூறி நூதனமான முறையில் முதியவர்கள் ஏமற்றப்பட்டு அவர்களிடமிருந்து பணம் பறிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட நீண்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மில்லியன் கணக்கான பணமும் வாகனங்களும் வழங்குவதாக உறுதி மொழி வழங்கி முதியவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

27 வயதான ஜவானு லேட்ஸ்ட்டார் என்ற நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றச் செயல்களின் மூலம் பணம் சம்பாதித்துள்ளதாக குறித்த நபர் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *