இந்துரில் நேற்று இரவு இடம்பெற்ற இந்திய – நியூசிலாந்;து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 90 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியால் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வயிட் வொஷ் செய்து கைப்பற்றியுள்ளது.

நேற்றைய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெ;ட் இழப்புக்கு 385 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முமறயே 101, 112 ஓட்டங்களை பெற்றனர்.

இதனைநயடுத்து 386 என்ற கடின இலக்கை துரத்திய கிவி அணி டேவோன் கொன்வே பெற்ற 138 ஓட்டங்கள உதவியுடன் 41.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 295 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *