ஐபிஎல் 16-வது சீசன் வரும் ஏப்ரலில் தொடங்குகிறது. . இதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை . ஆனால் ஏப்ரலில் தொடங்கி மே மாதம் வரை நடக்கும்.

இதுவரை 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதிகமுறை ஃபைனலுக்கு முன்னேறிய, 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் எம்எஸ் தோனி. ஐபிஎல்லில் 234 போட்டிகளில் ஆடி 4978 ரன்களை குவித்துள்ள தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2020-ம் ஆண்டே ஓய்வுபெற்றுவிட்டார். ஐபிஎல்லில் தனது கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் என உறுதியளித்திருந்தார்.

இந்த ஆண்டு ஐபிஎல் இந்தியாவில் நடப்பதால், இந்திய மண்ணில் ஐபிஎல் கோப்பையை 5-வது முறையாக ஜெயித்துவிட்டு தோனி ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுவதால், இதுவே அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம்.

இந்நிலையில், 41 வயதான டோனி ஐபிஎல் 16-வது சீசனுக்கான வலைப்பயிற்சியை மற்ற அனைத்து வீரர்களுக்கும் முன்பாகவே தொடங்கிவிட்டார்.

ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவரும் டோனிக்கு வேறு போட்டிகளில் ஆடும் பயிற்சி இல்லை என்பதால், முன்கூட்டியே வலைப்பயிற்சியை தொடங்கிவிட்டார். 2 மாதங்களுக்கு முன்பே பயிற்சியை தொடங்கிவிட்ட தோனி , வலைப்பயிற்சியில் பெரிய சிக்ஸர்கள் அடித்த வீடியோ வைரலாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *