சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் மீது புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடந்த காட்சிகள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன.

அதுபற்றிய வீடியோவில் வரிசையாக நிற்கும் கார்களின் மீது பெரிய, தடிமனான அளவுள்ள, பழுப்பு நிறத்தில் வளைந்தும், நெளிந்தும் போர்வை போன்று புழுக்கள் போன்ற உயிரினம் படர்ந்து காணப்படுகிறது. அதனால், வானில் இருந்து புழுக்கள் ஏதும் நம் மீது விழுந்து விட கூடாது என்பதற்காக சிலர் குடை பிடித்தபடியே பாதுகாப்பாக செல்கின்றனர்.

இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. இதற்கான காரணம் என்னவென இதுவரை தெரியாதபோதும், பலத்த காற்றில் அடித்து வரப்பட்டு இவை இந்த பகுதியில் மேலிருந்து கீழே போடப்பட்டு இருக்கும் என மதர் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகை தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *