றோயல் பேங்க் ஆப் கனடா வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டளவில் கனடாவில் வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாடு பெருமளவில் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாடை வரையறுக்க வேண்டுமானால் 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 332000 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

அதாவது ஆண்டுதோறும் வீட்டு நிர்வாணப் பணிகளை 20% அதிகரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 70 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு இருந்தன வீட்டு வாடகைத் தொகை அதிகரித்துச் செல்லும் அதேவேளை, வீடுகளுக்கான தட்டுப்பாட்டு நிலையும் வெகுவாக உயர்வடைந்துள்ளது.

சந்தையில் கேள்விக்கு ஏற்ற அளவில் வாடகை வீட்டு அலகுகள் நிரம்பல் செய்யப்படாத காரணத்தினால் இவ்வாறு வாடகை தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீடுகள் அதிக அளவில் நிர்மாணிக்கப்படவிட்டால் மக்கள் வீடுகளை வாடகைக்கு அமர்த்த பெரும் சிரமங்களை எதிர் நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *