(அந்துவன்)

“வாழும் காலத்தில் வாழ்த்துவோம்” எனும் தொனியில் தனது 90 வது அகவையில் கால்பதித்து கொண்டாடும் மலையகத்தின் மூத்த கல்விமான், ஆசிரியர் சிகரம் பிலீப் இராமையா அவர்களை கௌரவித்து இராகலை உயர் நிலை பாடசாலையில் விழா நடைபெற்றது.

விழா ஏற்பாட்டாளர் சட்டத்தரணி எஸ்.தாயுமானவன் தலைமையில்  இடம்பெற்ற  இந்த விழாவில் ஆசிரிய சிகரம் பிலீப் இராமையா குறித்த சாரல் துளிகள் நினைவு எனும் பதிவுகள், ஆக்கங்கள், அடங்கிய 333 பக்கங்களை கொண்ட மலர் வெளியீடு மிக விமர்சையாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பேராசிரியர் தை.தனராஜ்,எஸ்.சந்திரபோஸ், நிகழ்வுக்காக கனடாவிலிருந்து வருகை தந்திருந்த முன்னாள் ஆசிரியர் எஸ்.சந்திரசேகரன் உள்ளிட்டோருடன் சட்டத்தரணிகளான ஏ.பி.கணபதிப்பிள்ளை, சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி.இராஜதுரை, மற்றும் கல்வி பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *