விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம்

Share

Share

Share

Share

வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம் இது என்பதால், இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர்.
அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர். நடன இயக்குனராக தினேஷ் இணைந்துள்ளார் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் படக்குழுவினர் 180 பேருடன் காஷ்மீர் பறந்துள்ளது தளபதி 67 படக்குழு . இன்று படத்தில் நடிக்க உள்ள பிரபலங்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

 

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்