அஜித் குமார், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக த்ரிஷா கமிட்டாகியுள்ளதாகச் சொல்லப்பட்டது. பின்பு தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாகப் பேசப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு பல முறை தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் சில காரணங்களால் அது ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் பேச்சுக்கள் எழ, “இப்படம் கைவிடப்படவில்லை, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். மேலும் எங்கள் பெருமைமிகு படமாக இது இருக்கும்” என சந்திரமுகி-2 பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தெரிவித்தார்.
பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில் அவர் சிறிய வில்லனாம். மெயின் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கவுள்ளாராம். இவர் தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சஞ்சய் தத் அடுத்ததாக அஜித் படத்தில் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.