குருணாகல் மாவட்ட பொத்துஹெர கட்டுபொத்த நந்தன கெதர என்ற முகவரியை சேர்ந்த 25 வயதான நவும்பாலகே மலித் யயோத என்ற இரண்டாம் ஆண்டு மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த மாணவன் விடுமுறையில் வீட்டுக்கு சென்று நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்திற்கு திரும்பியுள்ளார். இவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றைய மாணவன் விடுமுறைக்கு சென்று திரும்பாத நிலையில், இந்த மாணவன் மாத்திரம் அறையில் இருந்துள்ளார்.