சிறு போகத்தில் உரத்தை கொள்வனவு செய்வதற்கான நிவாரணத் தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, விவசாயியொருவருக்கு ஒரு ஹெக்டேயருக்கு 20,000 ரூபா கூப்பன் வழங்கப்படவுள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இந்த நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *