வெருகல் மாவடிச்சேளையிலுள்ள நாதனோடை அணைக்கு ஆபத்துஏற்படும் வகையில் மேற்கொள்ளப்படும் மண்அகழ்வை உடனடியாக தடுக்குமாறு பாரளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது தொடர்பாக ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரியை நேரில் சந்தித்து பாரளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் வலியுறுத்தியும் உள்ளார்
ஆயினும் மண்அகழ்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல் பொய்வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது என கஜேந்திரன் MP குற்றஞ்சாட்டுகிறார்.
இது தொடர்பாக அவரது டூவிட்டர் பக்கத்தில
“இரேசா ஜானகி பெர்ணான்டோபுளௌளே என்ற நபருக்கு வழங்கப்பட்டுள்ள மண் அகழ்வு அனுமதியால் 9 கிராமங்கள் சுமார் 13000 மக்கள் ஆபத்தில். முறைப்பாடுகளை ஏற்க பொலீசார் மறுப்பதுடன் மக்களை அச்சுறுத்தி ஒடுக்குவதிலும் மும்முரம்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது டூவிட்டரில்https://twitter.com/skajendren/status/1697898346877518026?t=e-K8xSp7jFeUVP7xTZxaLw&s=19
வெருகல் மாவடிச்சேளையிலுள்ள நாதனோடை அணைக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்படும் மண்அகழ்வை தடுக்குமாறு ஈச்சிலம்பற்று OIC ஐ நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். மண்அகழ்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல் பொய்வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. pic.twitter.com/nPn1estsXt
— Selvarajah Kajendren MP (@skajendren) September 2, 2023