மகளீர் உலகக் கிண்ண தொடரின் நேற்றைய ஆரம்ப போட்டியில் இலங்கை மகளீர் அணி தென்னாபிரிக்க மகளீர் அணியை 3 ஓட்டங்களால் வென்றுள்ளது.

கேப்டவுனில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளீர் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஷாமரி அத்தபத்து 68 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனையடுத்து 130 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்த தென்னாபிரிக்க மகளீர் அணி இருபது ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோற்றது.

இனோகா ரணவீர அதிகூடிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஷாமரி அத்தபத்து ஆட்டநாயகியாக தெரிவானார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *