வேலை நிறுத்தம்…

Share

Share

Share

Share

சுகாதாரத் துறை, துறைமுகம், மின்சாரம், குடிநீர், ரயில்வே, தபால், வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று காலை முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரித் திருத்தங்கள், மின்சாரக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.

மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதியர்கள், ஆய்வக சேவைகள், மருத்துவமனை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார நிபுணர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளிலும் இன்று வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் துறைமுக ஊழியர்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில்வே லோகோமோட்டிவ் இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட பல ரயில்வே தொழிற்சங்கங்கள் ஏற்கனவே வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன.

பணிப்பகிஷ்கரிப்புக்கு மத்தியிலும் இன்று காலை காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரை அலுவலக புகையிரதம் ஒன்று இயங்க ஆரம்பித்திருந்தது.

இதேவேளை, ரயில்; பாதுகாப்புக்காக இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

என்றாலும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள துறைகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டால் உரிய வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

ஒடிசா ரயில் விபத்து: 260 பேர்...
பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும் –...
ரயில் விபத்து – 233 பேர்...
இன்று பொசன் பௌர்ணமி தினம்
தமிழகம் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவில்...
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி...