ஸ்ரீலங்கன் டொப் 100 விருது பெற்ற ” அண்ணாச்சி நியூஸின் கிழக்கின் பிரதம நிர்வாகி, சிரேஷ்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர்!

Share

Share

Share

Share

 

கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும்  அண்ணாச்சி நியூஸின் கிழக்கு மாகாண பிரதம  செய்தி நிர்வாகியும் .சிரேஷ்ட ஊடகவியலாளருமான நூருல் ஹுதா உமர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அகாசா நிறுவன ஸ்ரீலங்கன் டொப் 100 விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

 

15 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வரும் இவர் ஆய்வுக்கட்டுரைகளை வரைவதிலும், சமூகப் பிரச்சினைகளை துணிச்சலுடன் ஊடகங்களுக்கு அறிக்கையிடுவதிலும் முன்னிலை வகிக்கும் ஒருவராவார்.

அரசியல், சமூக, சமய, பொருளாதாரப் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் இவர் ஊடகத்துறைக்காக இந்த ஸ்ரீலங்கன் டொப் 100 விருதை தனதாக்கியுள்ளார்.

எமது செய்தி நிறுவனத்திலும் பிராந்திய செய்தியாளராகச் செயற்பட்டு வரும் இவர், தொடர் கட்டுரை வரைவதிலும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறார்.

எழுத்தாளராக, பேச்சாளராக, கவிஞராக, அறிவிப்பாளராக பல்வேறு திறமைகளைக்கொண்ட இவர், கிழக்கின் செயற்பாட்டு நிலை முக்கிய ஊடகவியலாளர்களில் ஒருவராவார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல்வேறு துறைசார்ந்த சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விதமாக இடம்பெற்ற அகாசா நிறுவன ஸ்ரீலங்கன் டொப் 100 விருது வழங்கிக் கௌரவிக்கும் இந்நிகழ்வில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இலக்கிய புரவலர் காஸிம் உமர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் ஹட்சன் சமரசிங்க, மதகுருமார்கள், ஊடக நிறுவனப்பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

விருதை பெற்ற எம்மவருக்கு இனிய வாழ்த்துக்கள்

 

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...