ஹெரோல் தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம்…

Share

Share

Share

Share

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெரோல் தோட்டத்திலுள்ள தோட்ட குடியிருப்பு ஒன்றின் மலசலகூடத்தில் சிக்கியிருந்த சிறுத்தைக்குட்டியை பிடிக்க நல்லதண்ணி மற்றும் நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள்  இன்று (26) நடவடிக்கை எடுத்தனர்.

நான்கு மாதங்களே ஆன குறித்த சிறுத்தை குட்டி மலசலகூடத்தில் சிக்கிய போது தோட்ட தொழிலாளி ஒருவர் சிறுத்தையை பார்த்துவிட்டு மலசலகூடத்தின் கதவை மூடிவிட்டு அட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சிறுத்தையை அங்கிருந்து மீட்பதற்காக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த வனஜீவராசி அதிகாரிகள் குறித்த சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டு, அதன் தாய் வசிக்கும் பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை ஹெரோல் தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் அத்தோட்டத்தில் உள்ள நாய்களும் சிறுத்தைகளால் வேட்டையாடப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை