இந்திய அணியை பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டி20 போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேவேளையில் மற்றொரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா நீண்ட நாட்களுக்கு பின்னர் அணியில் இடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில் 2வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான பிட்ச் டி20 போட்டிக்கானது போல் அல்லாமல் டெஸ்ட் போட்டிக்கானது போல் அமைந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த மைதானத்தில் மிரட்டினர். முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 99 ரன்களே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து போராடி வெற்றி கண்டது.

இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா 1 வெற்றிகளை பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

நாளை நடைபெறும் போட்டியில் சுப்மன் கில்லா? பிரித்வி ஷாவா? என்பதை பாண்ட்யா தான் முடிவு செய்ய வேண்டும். ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி டி20 தொடரையாவது கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *