ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வின் எண்ணக்கருவிற்கு அமைவாக 2022ஃ2023 ஆண்டுக்கான பெரும்போக நெல்லை அரசு விலைக்கு பெற்றுக்கொள்வது மற்றும் நெல்லை பகிர்ந்தளிக்கும் வேலைதிட்டத்தின் கீழ் இ.தொ.கா பொது செயலாளரும் , நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட இஞ்சஷ்ரிஇடில்லரிஇ ஓல்டன்இ ட்ரஷ்பிஇமாநெலிஇப்ரன்லோஇமஸ்கெலியா ஆகிய கிராம சேவகர் பிரிவில் உள்ள 3,750 க்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு இலவச அரிசி வழங்கல் நிகழ்வு இ.தொ.கா வின் தவிசாளரும் இஅம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஷ்வரன் தலைமையில் புளியாவத்தை இ சாமிமலை இமஸ்கெலியா ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பகமுவ பிரதேச செயலாளர்இஉதவி பிரதேச செயலாளர், சமூர்த்தி தலைமை காரியாலய முகாமையாளர்இ பிரதேச செயலக தலைமை காரியாலய முகாமையாளர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள்இ கிராம உத்தியோகத்தர்கள்இஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் இபயனாளர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.