தீர்வுகளை முன்வைப்பதற்காக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார்.
ஆபிரிக்க தூதுவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார கொள்கையின் புதிய கட்டம் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, சிரமமான காலகட்டத்தின்போது இலங்கையும் ஆபிரிக்காவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கியமையையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
மேலும் இலங்கைக்கும் சில ஆபிரிக்க நாடுகளுக்கும் பொதுவான சட்ட முறைமை இருப்பதாகவும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார்.
ஆபிரிக்க பிராந்தியத்துடன் இலங்கையும் குறிப்பிடத்தக்க பொருளாதார உறவுகளைப் பேணி வருகின்றது.
இந்த உறவு மேலும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆபிரிக்க கண்டம் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும் அண்மைய தசாப்தங்களில் அதன் முதலீடு, சுற்றுலா மற்றும் குடிவரவு என்பன வளர்ச்சியடைந்துள்ளன.
நாட்டில் அமைதியை பேணுதல் மற்றும் ஆபிரிக்க கண்டத்துடனான உறவைப் பலப்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி வழங்கி வரும் அர்ப்பணிப்புக்கும் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.