பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இரத்தம் சிந்துவது தொடர்வதால் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு பாலஸ்தீன அதிகார சபையின் பிரதமர் முகமது ஸ்டய்யே அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெனினில் இந்த ஆண்டில் இஸ்ரேலியப் படையால் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் நேற்று நடைபெற்ற மோதலில் இஸ்ரேலியப் படையால் பெண் ஒருவர் உட்பட 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

தங்கள் தரப்பில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை என்று இஸ்ரேலியப் படைகள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள இஸ்ரேலியப் படைகள், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் கூறும்போது, பலர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவப் பணியாளர்கள் ஜெனின் முகாமுக்கு வருவதை இஸ்ரேலியப் படைகள் சாத்தியமற்றதாக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும், உள்ளூர் மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் குழந்தைகள் வார்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *