எவரஸ்ட் மலையின் உச்சியை அடைந்து விட வேண்டும் என்ற வாழ் நாள் கனவை நினைவாக்கிக் கொள்ளும் நோக்கில் ஈடுபட்டிருந்த முயற்சியின் கனடியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனடாவின் வான்கூவரைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 63 வயதான பீட்டர் ஸ்வாட் என்ற நபவரை மலை ஏறிக்கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக கடமையாற்றிய ஸ்வாட் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது ஒன்பது வயது முதலே எவரஸ்ட் மலை உச்சியை அடைய வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவர் என ஸ்வாட்டின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 மீற்றர் உயரத்தில் ஸ்வாட் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

சுவாசப் பை பிரச்சினையினால் ஸ்வாட் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்வாட், உலகின் பல்வேறு மலைகளின் உச்சியை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *