ஜனாதிபதிக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.