கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் விற்பனை செய்யப்படும் ஓர் வகை காளான் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Golden Mushroom என்னும் பண்டக் குறியைக் கொண்ட Enoki mushrooms வகைகளை அந்நிறுவனம் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த வகை உற்பத்தி வேறும் மாகாணங்களிலும் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காளானை நுகர்வதனால் பற்றிரீயா வகையொன்றினால் தீங்கு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காளானை உட்கொள்வதனால் வாந்தி, தலைவலி, காய்ச்சல், தசை வலி, கழுத்து வலி உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காளான் வகையை உட்கொண்டதனால் உபாதைகள் ஏற்பட்டதாக உணர்ந்தால் மருத்துரை நாடுமாறு கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *