காட்டுத்தீ காரணமாக கடும் புகை உருவாகியுள்ளதால், ஆல்பர்ட்டா மாகாண மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு கனடா சுற்றுச்சூழல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

கால்கரி மற்றும் எட்மண்டன் ஆகிய நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள், அதனால் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறுகள் கொண்டவர்களுக்கு பெரும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

காட்டுத்தீ காலகட்டத்தில், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு கூறியுள்ள அதிகாரிகள், காற்றின் தரம் குறித்தும், புகை காரணமாக சாலையில் வரும் வாகனங்கள் கண்ணுக்கு சரியாக தெரியாத நிலை குறித்தும் மக்களை எச்சரித்துள்ளார்கள்.

மக்கள் ஏசி முதலான காற்றை சுத்திகரிக்கும் கருவிகளை இயக்கியபடி, கூடுமானவரையில் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

உங்களுக்கு ஏசி முதலான வசதிகள் இல்லையென்றால், நூலகம் அல்லது ஷாப்பிங் மால் போன்ற கட்டிடங்களுக்கு செல்வது நல்லது என்றும் கூறியுள்ளார்கள் அதிகாரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *