எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டாலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைக் கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது.

தமக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு போதுமானதாக இல்லை என சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

42 மற்றும் 59 ஆசனங்களைக் கொண்ட பஸ்களை, கிடைக்கும் எரிபொருள் கோட்டாவின் மூலம் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு சேவையில் ஈடுபடுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்ச எரிபொருளாக வேன்களுக்கு 40 லிட்டரும் பஸ்களுக்கு 100 லிட்டரும் வழங்கப்பட வேண்டும் என அவர் எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில், போக்குவரத்து கட்டணத்தை 10% குறைக்கத் தயாராக உள்ளதாக அகில இலங்கை  பாடசாலை  போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *