கொட்டக்கலை பகுதிக்கு விரைவில் தீயணைப்பு கருவிகள் உட்பட தீயணைப்பு வாகனமொன்றினை ஜப்பான் அரசாங்கத்தின் உதவியோடு வழங்குவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை நகரில்  இடம்பெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை பார்வையிட்ட போதே பின்வரும் விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவரோடு அடுத்த வாரம் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அச்சந்தர்பத்தில் இவ்விடயத்தையும் முன்வைத்து கொட்டக்கலை பகுதிக்கு விரைவில் தீயணைப்பு வாகனத்தை பெற்று தருவதாக
கூறியதோடு பாதிக்கப்பட்ட வர்த்தக ஸ்தாபனதற்கு தேவையான உதவிகளை பெற்று தருவதாகவும் தீப்பரவல் ஏனைய கடைகளுக்கு பரவாமல் தீயணைப்பை கட்டுப்படுத்த விரைந்து உதவிய அப்பகுதி இளைஞர்களுக்கும் ஐக்கிய வர்த்தக சங்கத்திற்கும் நன்றிகளை  ராதாகிருஸ்ணன்  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *