நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்ததுக்குள்ளானது.
இதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஹட்டன் – டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வேன் ஒன்றை கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதிலலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து கல்விச் சுற்றுலாவிற்காக சென்ற கொழும்பு தேஸ்டன் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் பயணித்த 42 படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பஸ் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை, விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மாணவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் அவர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு விமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதி விமானப்படைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
https://youtu.be/CfTrQp3fEj0