ரதெல்ல விபத்து- Update

நானுஓயா – ரதெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேருந்து சாரதி கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று நுவரெலியா நீதவான் நாலக சஞ்சீவ எதிரிசிங்க முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சந்தேகநபரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 100,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹொரண குடுஉதுவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்​ை கடந்த வெள்ளிக்கிழமை […]

வீதியை மூடுவதற்கான நடவடிக்கை

நுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ்ஸொன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் வேனில் பயணித்த அறுவரும், ஆட்டோ சாரதியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வேனில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள் , […]

சமர் செட் பகுதியில் விபத்தது (video)

  நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்ததுக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஹட்டன் – டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வேன் ஒன்றை கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதிலலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கல்விச் சுற்றுலாவிற்காக சென்ற கொழும்பு தேஸ்டன் கல்லூரி […]