கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.

கனடா பிரதமர் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டாலும், கனடாவைப் பொருத்தவரை, சர்வதேச மாணவர்களால் கனடாவுக்கு பெரும் வருவாய் உள்ளது. அதுவும், இந்திய மாணவர்கள் ஏராளமானோர் கனடாவில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆக, இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பாதிக்கப்பட்டதால், கனடாவுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு சிக்கல் என்றாலும், அதே நேரத்தில், இந்த சர்ச்சை காரணமாக பல மாணவர்கள் வேறு நாடுகள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பிவருகின்றனர். ஆக, அதனால் கனடாவுக்கும் நஷ்டம்தான். என்றாலும், அதைக் குறித்து கனடா வெளிப்படையாக பேசவில்லை.

இந்நிலையில், இந்தியாவுக்கான கனடாவின் உயர் ஸ்தானிகரான கேமரான் மெக்கே (Cameron Mackay), தான் இரு நாடுகளுக்கும் அறிவுரை ஒன்றைக் கூற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அதாவது, அரசுகள் தாங்கள் செய்வதை செய்யட்டும். அதே நேரத்தில், நம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் தொடரட்டும் என்று கூறியுள்ளார் கேமரான்.

நமது வர்த்தகமும், நமது நாடுகளும் மீண்டும் நட்பாக செயல்பட நாம் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

அதாவது, இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையால், வர்த்தகத்துக்கும் வருவாய்க்கும் பாதிப்புதான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் கேமரான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *