உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிப் பெற்று திருடர்களை இனம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்க தயார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியால் அதனை செய்ய முடியும் என ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க நேற்று (02) மாலை அம்பாறை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கூறினார்.
மக்களின் சொத்துகளை திருடியதும், வீண்விரயமாக்கியதுமே இன்றையே முக்கிய பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே அவர்களுக்கு தண்டனை வழங்க தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.