ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ண இலங்கைக்கான தகுதிச் சுற்றுப் போட்டி நாளை (18) சிம்பாப்வேயில் தொடங்குகிறது.
தகுதிச் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் இரு அணிகளும் ஒருநாள் உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி சிம்பாப்வேயில் நடைபெறவுள்ளதுடன், அதற்காக 10 அணிகள் இரண்டு குழுக்களாகப் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
34 போட்டிகள் கொண்ட போட்டி ஹராரே மற்றும் புலவாயோவில் நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் பத்து அணிகளின் தலைவர்கள் இன்று கிண்ணத்துடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
போட்டியை நடத்தும் சிம்பாப்வே, நேபாளம், மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் தகுதிச் சுற்றின் A பிரிவில் இடம்பெற்றுள்ளன.
B பிரிவில் இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
நாளை தொடங்கும் உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் அதிக கவனத்தை ஈர்த்த 10 வீரர்களை ஐசிசி பெயரிட்டுள்ளது, இதில் மத்திஷ பத்திரனாவும் அடங்குவர்.
இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக நடைபெறவுள்ளது.
போட்டி உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 க்கு தொடங்கும்.